கவிதைகள் (All)

தியாகத் திருநாள் வாழ்த்துக்கள்

தியாகத் திருநாள் வாழ்த்துக்கள்

நரபலி மறுத்து மனிதம் காத்த
தியாகத் திருநாள்தான்
ஹஜ் பெருநாள்

மும்முறை கனவில் வந்து
பலியிடக் கேட்டதாகக் கூறி
பெற்ற பிள்ளையையே
இறைவனுக்குத்
தியாகம் செய்ய முற்படுகிறார்
பக்தர்

கூர் வாளோ
வெட்ட மறுக்கிறது

சாத்தான்கூட
தடுத்து நிற்கிறான்

பின்னரோ
பலியிடத்தான் வேண்டுமெனில்
ஓர் ஆடு போதுமென்று
இறைக் கட்டளை வந்ததாக
காட்சி மாறுகிறது
கருணை நிறைகிறது

மனித உயிர் பலியிடுவது
தியாகமன்று
உன் உள்ளத்தினின்று
தீயவற்றைப் பலியிடுவதே
தியாகம்
என்றறியவைத்து
நரபலியை மறுதலித்த
இறைவனின் கட்டளை வந்த
காருண்ய நாளே
தியாகத் திருநாள்
ஹஜ் பெருநாள்

ஆம்
தனக்குள் இருக்கும்
தீய குணங்களைப்
பலியிடுதலே
இறைவன்
மனிதனிடம் கேட்கும்
ஒரே பலி

தியாகத் திருநாள்
வாழ்த்துக்கள்

கனடாவிலிருந்து
அன்புடன் புகாரி

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button