கடலாடியில் சீர்மரபினர் நலவாரியஅடையாள அட்டை வழங்கல்

கடலாடியில் சீர்மரபினர் நலவாரியஅடையாள அட்டை வழங்கல்

இராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில் பிற்பட்டோர்நலத்துறை சார்பில் சீர்மரபினர் நலவாரிய அடையாளஅட்டைக்கு ஏற்கனவே விண்ணப்பித்தவர்களுக்கு சீர்மரபினர் நலவாரிய அட்டை வழங்கப்பட்டது.இந்த அடையாள அட்டையை சீர்மரபினர் நலவாரிய அலுவலர்கள் வார்டன் பழனி,கார்த்திகேயன் ஆகியோர் வழங்கினர். இந்த வாரியத்தின் பயன்கள்கள் குறித்தும் இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் எங்களிடம் விண்ணப்பம் பெற்று விண்ணப்பிக்கலாம் எனக்கூறினர்.அப்போது பயனாளிகள் கூறும்போது; சீர்மரபினர் நலவாரியத்திற்கு மறு புதுப்பித்தல் முறையை ரத்து செய்து நிறந்தர அடையாள அட்டையாக வழங்கவேண்டும் என கோரிக்கைவைத்தனர்.இந்த நிகழ்வில் கடலாடி அரசுக்கல்லூரி விரிவுரையாளர் நீரா.பொன்முத்து,பத்திரிக்கையாளர் சுப்பிரமணிய சிதம்பரம்,ஊராட்சி செயலர் சுபாஷ்சந்திரபோஸ்,ஸ்ரீபகவதிஅறக்கட்டளை நிறுவுனர் குண்டுகுளம் வெள்ளைப்பாண்டியன் மெடிக்கல் கோட்டைச்சாமி,அம்பலம்முனியசாமி,மாயகிருஷ்ணன்,முத்தூட் மேலாளர் ராமசாமி,ஆட்டோ முனியாண்டி,அரியவள் ஒர்ஷாப் ராஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.




