கீழக்கரை நகர் ஐ எஃப் டி என் விளக்க கூட்டம் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்வு

கீழக்கரை நகர் ஐ எஃப் டி என் விளக்க கூட்டம் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்வு

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர் தமிழ்நாடு இஸ்லாமிய கூட்டமைப்பின் அறிமுக கூட்டம் மற்றும் கல்வி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஐ எஃப் டி என் ஏன்? எதற்கு? என்கின்ற தலைப்பில்
ஐ எஃப் டி என் மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் தூத்துக்குடி சம்சுதீன் சிறப்புரை நிகழ்த்தினார்கள். ஐஎஃப் டி என் மாநில துணைத்தலைவர் பெரம்பலூர் ஜெயினுதின் தமிழக முஸ்லிம்களின் ஒற்றுமை குறித்து சிறப்புரை நிகழ்த்தினார்.இந்நிகழ்ச்சியை ஐ எஃப் டி என் மாவட்ட செயலாளர் சையது இப்ராஹிம் ஒருங்கிணைப்பு செய்தார் . முகமது அப்துல்லா ஹாஜி கீழக்கரை நகர துணை செயலாளர் கிராத் ஓதி துவக்கி வைத்தார். முகமது ஃபரூஸ் மாவட்ட தலைவர் முன்னிலை வகித்தார். நஸ்ருதீன் கீழக்கரை நகர பொருளாளர் விளக்கவுரை நிகழ்த்தினார்.
இந்நிகழ்ச்சியில் பனிரெண்டாம் வகுப்பு முதல் மூன்று இடம் பிடித்த மாணவிகளுக்கும் பத்தாம் வகுப்பு முதல் மூன்று இடம் பிடித்த மாணவிகளுக்கும் (ஷீல்ட்)கேடயம் வழங்கப்பட்டது. பொருளாதாரத்தில் பின் தங்கிய 40க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக ஹமீதியா பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜாக்குலின் லதா, அப்துல் ரசாக் வடக்கு தெரு ஜமாத் செயலாளர் மற்றும் எழுத்தாளர் அவர்கள், முகைதீனியா பள்ளிக்கல்வி குழு தலைவர் முகைதீன் இப்ராஹிம், அபூபக்கர் சித்தீக் பத்திரிகையாளர், முகைதீனிய மெட்ரிகுலேஷன் பள்ளி தலைமை ஆசிரியை கலந்து கொண்டு சிறப்பித்தனர்.மேலும் கீழக்கரை ஜகுபர் சாதிக் நகர துணைச் செயலாளர் சுல்தான் அரசர் நகர இளைஞரணி செயலாளர் டாக்டர் செய்யது ராசிக் மருத்துவ அணி செயலாளர் மற்றும் மாவட்ட, நகர நிர்வாகிகள் கீழக்கரை பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வின் இறுதியாக குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான விபத்தில் மரணித்தவர்களுக்காக ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. சுல்தான் கீழக்கரை நகர துணைத் தலைவர் நன்றியுரை கூறி நிறைவு செய்தார்.




