இராமநாதபுரம்

சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராஜீவ் ஆறுதல்

சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராஜீவ் ஆறுதல்

பரமக்குடி அருகே சரக்கு வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத் துறை அமைச்சர் ராஜீவ் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

பரமக்குடி அருகே சரக்கு வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத் துறை அமைச்சர் ராஜீவ் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே உள்ள வாகைக்குளம் பகுதியில் கடந்த 18 ஆம் தேதி சரக்கு வாகனம் லாரி மோதிய விபத்தில் சந்தைக்கடைத் தெருவைச் சேர்ந்த தவமுருகன் மனைவி பூபதி, ராமன் மனைவி அருணா, ராமன், வாகைக்குளத்தைச் சேர்ந்த நாகராஜன் மனைவி அமுதா, துரைராஜ் மனைவி ராமேஷ்வரி, கீழம்பலைச் சேர்ந்த நாகராஜன் மனைவி ஈஸ்வரி ஆகிய 6 பேர் உயிரிழந்தனர்.

இவர்களில், கூலித் தொழிலாளிகளான ராமன், அவரது மனைவி அருணா உயிரிழந்த நிலையில் அவர்களது மகள்கள் பவித்ரா, சந்தியா, மகன் முத்துமணி, கணவரைப் பிரிந்து வாழ்ந்துவந்த கட்டுமானப் பெண் தொழிலாளி பூபதியின் மகன் ஹரியும் ஆதரவற்ற நிலையில் உள்ளனர்.

சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என உறவினர்கள் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், தமிழக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை அமைச்சர் ராஜீவ், சந்தைக்கடைத் தெரு, வாகைக்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள உயிரிழந்தவர்களின் வீட்டுக்கு நேரில் சென்று அவர்களது பிள்ளைகளுக்குஆறுதல் கூறினார்.

அப்போது அவர்களிடம் முதல்வரின் நிவாரண நிதி உள்ளிட்ட நிதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ராஜீவ் உறுதியளித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button