இராமநாதபுரம்
ராமநாதபுரத்தில் தமிழ்நாடு இஸ்லாமிய கூட்டமைப்பு நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம்!

ராமநாதபுரத்தில் தமிழ்நாடு இஸ்லாமிய கூட்டமைப்பு நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம்!

ராமநாதபுரத்தில் தமிழ்நாடு இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.
மாநில ஒருங்கிணைப்பாளர் வழுதூர் சபீக் ரஹ்மான் ஒருங்கிணைப்பிலும், மாநில துணைத்தலைவர் டாக்டர் ஆலிம் சாகுல் ஹமீது முன்னிலையிலும் இக்கூட்டம் நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்ட தலைவர் அப்துல் பாசித் மற்றும் மாவட்ட செயலாளர் செய்யது அலி ஆகியோர் தலைமை தாங்கினர்.
இந்த நிகழ்வில் ராமநாதபுரம் மாவட்ட கௌரவத் தலைவர் இக்பால் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்



