இராமநாதபுரம்

இராமநாதபுரம் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் உத்தரவின் பேரில் கீழக்கரை அருகே ரூ.1.68 இலட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் – 2 பேர் கைது!

இராமநாதபுரம் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் உத்தரவின் பேரில் கீழக்கரை அருகே ரூ.1.68 இலட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் – 2 பேர் கைது!

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழக்கரை – காஞ்சிரங்குடி சாலையில், கோரைக் கூட்டம் பிரிவு சாலையில் கீழக்கரை ஆய்வாளர் பத்மநாபன் தலைமையில் காவலர்கள் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ஐயத்திற்கு இடமளிக்கும் வகையில் வந்த TN 45 AH 4788 என்ற வெள்ளை நிற மகிழுந்தை மடக்கி சோதனை செய்தனர். அதில் மகிழுந்தின் பின்பகுதியில் மூட்டை மூட்டையாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. மூட்டைகள் குறித்து காவலர்கள் கேட்ட கேள்விக்கு முறையாக பதில் அளிக்காததால் மகிழுந்தில் வந்த இருவரையும் பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விவரம்: கணேஷ் புகையிலை – 13 மூட்டைகள் (176.245 கிலோ) – மதிப்பு ரூ.93,960/-,கூல் லிப் புகையிலை – 1 மூட்டை (07.600 கிலோ) – மதிப்பு ரூ.14,848/- விமல் புகையிலை – 6 மூட்டைகள் (24.900 கிலோ) – மதிப்பு ரூ.45,780/- புகையிலை – 3 மூட்டைகள் (06.100 கிலோ) – மதிப்பு ரூ.13,725/-மொத்தம் 214.845 கிலோ எடையுள்ள ரூ.1,68,313/- மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மகிழுந்து பறிமுதல் செய்யப்பட்டது.இது தொடர்பாக கீழக்கரை காவல் நிலையத்தில் வழக்கு பதிந்து புகையிலை பொருட்கள் தடைச் சட்டம் 2003-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.கைது செய்யப்பட்டவர்கள்: சர்புதீன் (45),சுல்தான் கனி (36) ஆகியோரை கைது செய்தனர், மேலும் ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் அவர்களின் உத்தரவின் பேரில், கீழக்கரை சரக துணை கண்காணிப்பாளர் யுவா பிரியா அவர்களின் மேற்பார்வையில், கீழக்கரை காவல் ஆய்வாளர் பத்மநாபன் மேல் விசாரணை மேற்கொண்டு வருகிறார். மேலும் இது தொடர்பாக யார் யாருக்கு இதில் தொடர்பு உள்ளது என்று விசாரித்து வருவதாகவும் தெரிவித்தார்,

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button