இராமநாதபுரம்

இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை – ஆள் கடத்தல் வழக்கில் தொடர்புடைய 7 பேர் மீது குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை!

இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை – ஆள் கடத்தல் வழக்கில் தொடர்புடைய 7 பேர் மீது குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை!

இராமநாதபுரம், ஆக.28

இராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், ஷேக் நஸ்ருதீன் என்பவரை பணம் பறிக்கும் நோக்கில் காரில் கடத்திச் சென்றதாக நபில் அகமது,முகம்மது நௌபல் அலி, சாகுல் ஹமீது, முகமது ரக்சீம், அப்துல் ரகுமான், செய்யது சிபாயுதீன்,சதாம் உசேன் ஆகிய 7 பேர் மீது திருப்புல்லாணி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தினர்.

இவர்கள் தொடர்ந்து சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்ததை தடுக்கும் வகையிலும், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் நலனை கருத்தில் கொண்டும்,

இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.சந்தீஷ், IPS., அவர்களின் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் சிவகுரு பிரபாகரன், IAS அவர்கள் 7 பேரையும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button