இராமநாதபுரம்

கமுதி அருகே விவசாயிகளை தாக்கிய காட்டுப்பன்றிகள் – 4 பேர் படுகாயம்!

கமுதி அருகே விவசாயிகளை தாக்கிய காட்டுப்பன்றிகள் – 4 பேர் படுகாயம்!

இராமநாதபுரம் ஆக,28
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே திம்மநாதபுரம் கிராமத்தில் விவசாய பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 4 விவசாயிகளை காட்டுப்பன்றிகள் தாக்கியதில் படுகாயம் அடைந்தனர்.

காயமடைந்தவர்கள் செல்வம், முத்தழகர், மாரீஸ்வரன், சசிவர்ணம் ஆகிய 4 பேரும் முதலில் கமுதி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று, பின்னர் தீவிர சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல் கடந்த வாரம் முதல்நாடு – முஸ்டாகுறிச்சி சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஊராட்சி செயலாளர் சக்திவேல் உள்ளிட்ட 2 பேரை காட்டுப்பன்றி தாக்கியது. இதில் காயமடைந்த இருவரும் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தற்போது பட்டப்பகலில் விவசாய பணியில் ஈடுபட்ட 4 பேரை காட்டுப்பன்றிகள் தாக்கிய சம்பவம் கமுதி சுற்றுவட்டார விவசாயிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ள காட்டுப்பன்றிகளை அப்புறப்படுத்த வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button