இராமநாதபுரம்

போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்வு

மதுரை, மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் போதைப்பொருள் தடுப்புக்குழு (ANTI-DRUG CLUB)சார்பாக 27.08.2026 வியாழக்கிழமை 12 மணியளவில் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு கல்லூரித் தலைவர் திரு. மூ.விஜயராகவன், கல்லூரிச் செயலாளர் திரு.சு.இரா.ஸ்ரீதர், கல்லூரி முதல்வர் முனைவர் அ.ராமசுப்பையா, கல்லூரி இயக்குநர் திரு.ச.பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். விரிவாக்கம் & செயல்பாடுகள், முதன்மையர் திரு S.சிலம்பரசன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.

இந்நிகழ்விற்குச் சிறப்பு விருந்தினராக, மதுரை, திருப்பரங்குன்றம், பிரம்ம குமாரிகள், ராஜயோக தியான மையம், ராஜயோக ஆசிரியர் B.K.யோகேஸ்வரி B.Com.,HDCA., அவர்கள் வருகை புரிந்து, “போதை இல்லா இளைஞன். சரித்திரம் படைக்கும் தலைவன்.”எனும் தலைப்பில் உரையாற்றினார். தனது சிறப்புரையில், ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ விரும்புவோர் நல்ல பழக்கங்களை மேற்கொள்ள வேண்டும். உடற்பயிற்சி, யோகா, விளையாட்டு போன்றவைகளை மாணவர்கள் மேற்கொண்டால் மகிழ்வுடன் வாழ முடியும். போதைப்பொருட்களை உட்கொண்டால் பல்வேறு மன மற்றும் உடல் பிரச்சனைகள் ஏற்படும் எனவும், போதைப்பொருட்களினால் ஏற்படும் விளைவுகளை அழகுபட எடுத்துரைத்தார். அடுத்தாக ஆரோக்கிய பயிற்சியளர் திரு B.K.சுரேஷ் அவர்கள் மாணவர்களுக்கு உடற்பயிற்சியின் அவசியத்தை எடுத்துரைத்து போதைப்பொட்களுக்கெதிரான உறுதிமொழியை முன்மொழிந்தார்.
இறுதியாக போதைப்பொருள் தடுப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் முனைவர் சே.முனியசாமி நன்றியுரை கூறினார். இந்நிகழ்வில் 271 மாணவர்கள் பங்கேற்றுப் பயனடைந்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button