இராமநாதபுரம்

முதுகுளத்தூர் அருகே உள்ள காத்தாகுளம் கிராமத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி கோலாகலம்

முதுகுளத்தூர் அருகே உள்ள காத்தாகுளம் கிராமத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி கோலாகலம்

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள காத்தாகுளம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ செம்பு கூத்த அய்யனார் கோயில் புரவி எடுப்பு திருவிழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி சிறப்பாக நடைபெற்றது. இந்த போட்டியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 10 க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. காளைகளை அடக்கும் வீரர்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினர். போட்டியை காண ஏராளமான பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் திரண்டிருந்தனர்.
போட்டியில் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் ரொக்கப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கி பாராட்டினர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் மற்றும் காத்தாகுளம் கிராம பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர். இந்நிகழ்ச்சி காத்தாகுளம் கிராம மக்களிடையே உற்சாகத்தையும் திருவிழா மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button