இராமநாதபுரம்

கீழக்கரை அனைத்து சமுதாய கூட்டமைப்பின் சார்பில் முகம்மது சதக் பொறியியல் கல்லூரியில் இஃப்தார் நிகழ்வு!!

கீழக்கரை அனைத்து சமுதாய கூட்டமைப்பின் சார்பில் முகம்மது சதக் பொறியியல் கல்லூரியில் இஃப்தார் நிகழ்வு!!

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அனைத்து சமுதாய கூட்டமைப்பு ஒருங்கிணைத்த இஃப்தார் நிகழ்வு முகமது சதக் பொறியியல் கல்லூரி அரங்கில் சிறப்பாக நடைபெற்றது இந்நிகழ்வு ஏற்பாட்டினை கூட்டமைப்பின் தலைவர் ஹாமித் இப்ராஹிம், பி ஆர் எல் சதக் அப்துல் காதர் மற்றும் கவுன்சிலர் ஷேக் உசேன், முகமது பஃருஸ் உள்ளிட்டோர் ஒருங்கிணைப்பு செய்திருந்தனர், இதில் இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி,
ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் அன்வர் ராஜா, அப்துல் ரஹ்மான், தமுமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் ஹாஜா கனி, தமுமுக மாநில துணைப் பொதுச் செயலாளர் எஸ் சலிமுல்லாஹ்கான் , எஸ் டி பி ஐ கட்சி மாநிலத் துணைத் தலைவர் அப்துல் ஹமீது,மற்றும் நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ்,தமிழ்நாடு இஸ்லாமிய கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் சம்சுதீன், திமுக நகர் நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்,புனிதமான ரமலான் மாதம் தியாகம், பொறுமை, கருணை மற்றும் சகோதரத்துவத்தின் உயர்ந்த மதிப்புகளை நமக்கு நினைவூட்டுவதாக கலந்து கொண்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் தெரிவித்தனர்,மத நல்லிணக்கம், மனிதநேயம் மற்றும் சமூக ஒற்றுமையை வலுப்படுத்தும் இத்தகைய இப்தார் நிகழ்வுகள் மக்களை ஒன்றிணைக்கும் அழகான தருணங்களாக அமைந்ததாகவும் கூறினார் இதில் மத அறிஞர்கள், சமூக ஆர்வலர்கள்,பொதுமக்கள், ஊர் முக்கியஸ்தர்கள் அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர். சமத்துவ இஃப்தார் நிகழ்வு மத நல்லிணக்கமும் மனிதநேயத்திற்கும் அடையாளமாக திகழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சியின்போது சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் அவர்களுக்கு கூட்டமைப்பு சார்பில் நினைவு பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர், இதில் 3000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியின் இறுதியில் அனைவரும் இரவு விருந்து உபசரிப்பு வழங்கப்பட்டது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button