இராமநாதபுரம்

சார்பதிவாளர் வேல்முருகன் மீது விதிக்கப்பட்ட தற்காலிக பணிநீக்க உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறை ஊழியர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்

சார்பதிவாளர் வேல்முருகன் மீது விதிக்கப்பட்ட தற்காலிக பணிநீக்க உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறை ஊழியர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பு காலை முதல் மாலை 5 மணி வரை காத்திருப்பு போராட்டம் நடத்தி, பின்னர் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். கமுதி வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில்
சம்பா மிளகாய் கொள்முதலில் தரமற்ற மிளகாய் வாங்கப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில், சம்பந்தமில்லாத அதிகாரியான சார்பதிவாளர் வேல்முருகன் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக ஊழியர் சங்கம் குற்றம்சாட்டியது.
மேலும், சம்பவம் நடந்த காலத்தில் அவர் விடுப்பில் இருந்த போதிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறி, பணிநீக்க உத்தரவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button