தமிழ்நாடு

மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் முத்தமிழ் முற்றம்

மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் நேற்று 20.08.2026 முத்தமிழ் முற்றம் நடைபெற்றது. நிகழ்வில் மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி தமிழ் உயராய்வு மைய உதவி பேராசிரியர் முனைவர் சே.முனியசாமி அவர்கள் “தமிழ் இலக்கியங்களில் நட்பும் சமூகப் பொறுப்பும்” என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.

சங்க இலக்கியங்களில் நட்பை ஒரு பகுதியாக சுட்டினர். திருவள்ளுவர் நட்பை ஒரு முழுமையான வாழ்க்கை நெறியாகக் காட்டுகிறார் எனவும், உலகின் முதன் முதலாக திருவள்ளுவர் நட்பைக் குறித்து ஐந்து அதிகாரங்களில் 50 குறட்பாக்களில் சிந்தனைகளைக் கையாண்டு உள்ளார். நீதி இலக்கியங்களில் நட்பு பற்றியும் நட்புக்குரிய குணங்கள் பற்றியும், நவீன இலக்கியங்களில் நட்பும் அதன் பரிமாணங்களையும், நவீன இலக்கியம் காட்டும் நட்பின் புதிய முகங்கள் பற்றியும் எடுத்துரைத்தார். குறிப்பாக சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன், கி.ராஜநாராயணன் ஆகியோரின் படைப்புகளில் மனித உறவுச் சிக்கல்களுக்கு நட்பு ஒரு ஆதரவாக அமைகிறது எனவும், இன்றைய தலைமுறையினருக்கு நட்பின் தேவை பற்றியும் எடுத்துரைத்தார்.
நிகழ்வில் தமிழ் ஆர்வலர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள், வாசகர்கள் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button