தமிழ்நாடு

விதைப்பந்து தயாரிப்பு—-விஸ்வரூபமெடுக்கிறது!

விதைப்பந்து தயாரிப்பு—-விஸ்வரூபமெடுக்கிறது!

 பாளையங்கோட்டை பிளாரன்ஸ் சுவைன்சன் காது கேளாதோர் மற்றும் வாய் பேச முடியாதோர் மேல்நிலைப் பள்ளியில் விதைப்பந்துகள் தயாரித்து வீசி, வனங்களை உருவாக்குவது குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது.

“ஒரு கோடி விதைப்பந்துகள்” உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் சமூக நல ஆர்வலர் வெங்கடம்பட்டி பூ. திருமாறன் சிறப்புரையாற்ற சைகை மொழி பெயர்ப்பாளர் சுபா தமது சைகை மொழி மூலம் மாணவ மாணவியருக்கு புரிய வைத்தார்.

 நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியை ஜே. ஜான்சி தலைமை தாங்கினார். பள்ளி தாளாளர் ஆர்.கே.ஜேக்கப், ஓய்வு பெற்ற தாசில்தார் முத்துசாமி முன்னிலை வகித்தனர். ஹெலன் ஜாலினா வரவேற்றார். பசுமைப்படை பொறுப்பு ஆசிரியை பாலின் ஜோன்ஸ் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தார்.

 விதைப்பந்துகளை மாணவ மாணவியர் எப்படி செய்ய வேண்டும், ஏன் செய்ய வேண்டும், அதற்கான அவசியம் என்ன என்பதனை திருமாறன் விளக்கினார். ஹரி பிரியாணி அதிபர் ஹரிஹர செல்வன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பங்கேற்புச் சான்றிதழ்களை வழங்கினார். “வரம் ஜவகர்” நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

 தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, குமரி, விருதுநகர், மதுரை மாவட்டங்களில் மழை வளம் அதிகரிக்க மரங்களை பெறுவாரியாக வளர்க்க பள்ளிகள், கல்லூரிகளை மாவட்ட ஆட்சியர்கள், கல்வித்துறை அதிகாரிகள் ஒருங்கிணைக்க வேண்டும் என திருமாறன் வேண்டுகோள் வைத்தார். விதைப்பந்து விஷயத்தில் நன்கு செயல்படும் பள்ளிகள், ஆசிரியர்களுக்கு பாராட்டு பத்திரங்கள் வழங்கப்பட உள்ளன  விதைப்பந்து தயாரிப்பில் ஈடுபடும் மாணவர்களுக்கு “சூப்பர் மாணவர் விருது” வழங்கப்பட  உள்ளன.

 “விதைகளை வீசுவோம்!

முளைத்தால் அது மரம்! முளைக்காவிட்டால் அது உரம்”.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button