இராமநாதபுரம்

இலங்கை கடற்படையால் 9 இராமேஸ்வரம் மீனவர்கள் கைது

இலங்கை கடற்படையால் 9 இராமேஸ்வரம் மீனவர்கள் கைது
படகுகள் பறிமுதல் – மீனவர் சங்கங்கள் கண்டனம்
வாழ்வாதாரத்திற்காக கடலுக்கு மீன்பிடிக்க சென்ற இராமேஸ்வரத்தை சேர்ந்த 9 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் படகுடன் கைது செய்யப்பட்டனர்.
மன்னார் வடக்கு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். அவர்களின் விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.
தொடர்கதையாகும் பிரச்சனை
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை அவ்வப்போது கைது செய்வது தொடர்கதையாக உள்ளது. கடந்த வாரமும் கட்சத்தீவு – தனுஷ்கோடி இடைப்பட்ட கடல் பகுதியில் 9 இராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படை நள்ளிரவில் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
மீனவர் சங்கங்கள் கோரிக்கை:
இலங்கை கடற்படையின் இந்த அடாவடி செயல் மீனவர்களிடையே அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுதலை செய்யவும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை மீட்கவும் மத்திய மற்றும் மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button