SDPI இராமநாதபுரம் மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் – 4 தீர்மானங்கள் நிறைவேற்றம்

SDPI இராமநாதபுரம் மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் – 4 தீர்மானங்கள் நிறைவேற்றம்

SDPI கட்சி இராமநாதபுரம் மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் நூருல் அமீன் தலைமையில் முதுகுளத்தூரில் உள்ள மாவட்ட தலைமை அலுவலகத்தில் உற்சாகத்துடன் நடைபெற்றது.
கூட்டத்தில் மாவட்ட பொதுச்செயலாளர் பாஞ்சுபீர், மாவட்ட துணைத் தலைவர் மௌலவி மீரான் முஹைதீன் மன்பஈ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட அமைப்பு பொதுச் செயலாளர் செய்யது இப்றாகிம் நிகழ்வுகளை தொகுத்து வழங்கினார். மாவட்ட செயலாளர் கன்சுல் மஹரிபா வரவேற்புரை ஆற்றினார்.
மாவட்ட செயலாளர்கள் காஜா முஹைதீன், ராஜா முஹம்மது, மாவட்ட பொருளாளர் செய்யது சதக்கத்துல்லா, விருதுநகர் முன்னாள் மாவட்ட தலைவர் அலி அஹமது, கல்வியாளர் அணி மாவட்ட தலைவர் அண்ணல் முஹம்மது உட்பட அனைத்து நிர்வாகிகளும் பங்கேற்றனர்.நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள்
- மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு பாராட்டு
போதைப்பொருள் உற்பத்தி மற்றும் சட்டவிரோதக் கடத்தலை ஒழிப்பதில் சிறப்பாகப் பணியாற்றியதற்காக தமிழக முதல்வரின் காவல் பதக்கம் பெற்ற இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G. சந்தீஷ் IPS அவர்களுக்கு மாவட்ட செயற்குழு மனமார்ந்த வாழ்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தது.
“போதைப்பொருள் இல்லா இராமநாதபுரம் மாவட்டத்தை உருவாக்கும் அவரது பணி தொடர வேண்டும்” எனவும் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. - மகளிரணி மாவட்ட பொதுக்குழு அறிவிப்பு
SDPI கட்சி இராமநாதபுரம் மேற்கு மாவட்ட மகளிரணி மாவட்ட பிரதிநிதிகள் சபை எனும் மாவட்ட பொதுக்குழு வருகின்ற 30.08.2026 அன்று மாலை நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. - மின்சாரக் கட்டணக் குழப்பத்திற்கு கண்டனம்
இப்பகுதியில் மின்சார அளவீடு மற்றும் கட்டணக் கணக்கீட்டில் நிலவும் குழப்பங்களால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதை கூட்டம் வன்மையாகக் கண்டித்தது.
தவறான கணக்கீடுகளை உடனே சரிசெய்து, கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டிருந்தால் மறுகணக்கீடு செய்து நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு மின்சார வாரியத்தையும் தமிழக அரசையும் வலியுறுத்தியது. - அரசு அலுவலகங்களில் புரோக்கர் ஆதிக்கத்தை ஒழிக்க வேண்டும்
அரசு அலுவலகங்களில் பொதுமக்களிடம் பணம் வசூலிக்கும் இடைத்தரகர்கள் மற்றும் புரோக்கர்களின் ஆதிக்கத்தை முற்றிலும் ஒழிக்க சிறப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தியது.
குறிப்பாக வருவாய்த்துறை, பத்திரப்பதிவுத்துறை, RTO, காவல் நிலையங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் சிறப்பு கண்காணிப்பு மற்றும் திடீர் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும்.
“இடைத்தரகர் இல்லாமல் – இலஞ்சம் இல்லாமல் – அரசு சேவை நேரடியாக மக்களுக்கு!” என்ற நிலையை தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் உறுதி செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கட்சியின் சார்பில் பல்வேறு மக்கள் நலப் பணிகளை முன்னெடுக்கும் நோக்கில் இத்தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.




