இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனியிடம் கோரிக்கை மனு

இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனியிடம் கோரிக்கை மனு

கீழக்கரை ஜன,5
கீழக்கரை பொதுமக்கள் கூட்டமைப்பு
சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி அவர்களிடம் கோரிக்கை மனுவை சேகு இப்ராஹிம் வழங்கினார்
இந்நிகழ்வில் நிர்வாக குழு உறுப்பினர்கள் நூர்தீன் மற்றும் நெய்னா அவர்களும் உடன் இருந்தனர், மனுவில்
கீழக்கரை ECR தாசிம் பீவி மகளீர் கல்லூரி, கீழக்கரை DSP அலுவலகம் நான்கு சாலை சந்திப்பு மற்றும் கும்பிடுமதுரை செய்லும் வளைவு சாலை பகுதியிலும் விபத்து அதிகமாக நடைபெறுகிறது அதனை தடுக்கும் வகையில் அறிவிப்புப்பலகை மற்றும் சூரிய சக்தியுடன் கூடிய வேக கட்டுப்பாட்டு சிகப்பு விளக்கு தடுப்பரண மற்றும் வேக தடை அமைக்க வேண்டியும்,கீழக்கரை 2014 ல் நகராட்சியாக மாறிவிட்டது என்றும் அதிக மக்கள் தொகை பெருக்கம் மற்றும் வாகன நெரிசல் நிறைந்து காணப்படுகிறது, அதனை கருத்தில் கொண்டு புதிய போக்குவரத்து காவல் நிலையம் அமைக்க வழி வகை செய்து தர நடவடிக்கை எடுக்கும் படியும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.




