ராமநாதபுரம் சுவார்ட்ஸ் பள்ளி NSS குழுவிற்கு முதல்வர் பாராட்டு

ராமநாதபுரம் சுவார்ட்ஸ் பள்ளி NSS குழுவிற்கு முதல்வர் பாராட்டு

ரூ.50,000 பரிசு
“போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” திட்டத்தின் கீழ் 2025-2026 ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட *ராமநாதபுரம் சுவார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளி NSS தன்னார்வக்குழு மாநில அளவில் 3-ம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளது.முதல்வரிடம் இருந்து விருது சென்னை மாநில கல்லூரி கலையரங்கில் நடைபெற்ற விழாவில் தமிழக முதல்வர் ரூ.50,000 காசோலை, கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.
இந்த விருதினை பள்ளியின் பொறுப்பு தலைமையாசிரியர் ஆல்பர்ட் கிருபாகரன், NSS நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் முனைவர். செல்வக்குமார் மற்றும் 5 மாணவர்கள் முதல்வரிடம் இருந்து பெற்றுக்கொண்டனர்.
மதுரை-இராமநாதபுரம் திருமண்டல மகாகனம் பொருந்திய பேராயர் முனைவர். ஜெயகிங் பிரின்ஸ் பிரபாகர் மற்றும் பள்ளியின் தாளாளர் ஜான்சன் இஸ்ரேல் ஆகியோர் சாதனை படைத்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை வெகுவாக பாராட்டினர்.
மாணவர்களின் சமூக அக்கறை மற்றும் சேவை மனப்பான்மைக்கு கிடைத்த பெரும் அங்கீகாரமாக இது அமைந்துள்ளது.




