இராமநாதபுரம்

பாம்பன் தெற்கு கடற்கரையில் 130 கிலோ திருக்கை மீன் பிடிபட்டது

பாம்பன் தெற்கு கடற்கரையில் 130 கிலோ திருக்கை மீன் பிடிபட்டது

பாம்பன் தெற்கு கடற்கரை பகுதியில் மீனவர்கள் கடலுக்கு சென்று மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது, அவர்களது வலையில் சுமார் 130 கிலோ எடை கொண்ட பிரம்மாண்ட திருக்கை மீன் ஒன்று சிக்கியது.

கடும் போராட்டத்திற்கு பின் கரைக்கு கொண்டு வரப்பட்டது
அதிக எடை காரணமாக இரண்டு மீனவர்கள் சேர்ந்து இழுத்தும் மீனை நகர்த்த முடியாத நிலை ஏற்பட்டது. பின்னர் கடும் சிரமத்துடன் மீனை இழுத்து கரைக்கு கொண்டு வந்தனர்.

நீண்ட நாட்களுக்கு பிறகு இவ்வளவு பெரிய அளவில் மீன் கிடைத்ததால் மீனவர்கள் மகிழ்சி அடைந்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மீனவர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரம்மாண்ட திருக்கை மீன் பிடிபட்ட சம்பவம் பாம்பன் தெற்கு கடற்கரை பகுதியில் தற்போது கவனம் பெற்றுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button