இராமநாதபுரம்

கமுதி அருகே திமுக- தவெக தரப்பினருக்கு இடையே மோதல் தொடர்பாக 24 பேர்மீது போலீசார் வழக்கு

கமுதி அருகே திமுக- தவெக தரப்பினருக்கு இடையே மோதல் தொடர்பாக 24 பேர்மீது போலீசார் வழக்கு .

ராமநாதபுரம். ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள சின்னஉடப்பங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் வலம்புரி மகன் வாசுதேவன் இவர் கமுதி ஒன்றிய திமுக வடக்கு ஒன்றிய செயலாளராக உள்ளார் இவருக்கும் தமிழக வெற்றிக்கழக த்தின் மேற்கு மாவட்ட செயலாளராக உள்ள அதே ஊரைச் சேர்ந்த முத்து மகன் மன்மதன் (33) தரப்பினருக்கும் முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகின்றது இந்நிலையில் திங்கள்கிழமை அந்த கிராமத்தில் உள்ள சோழியான்குளம் கண்மாயில் ஆழ்துளைக் கிணறு அமைப்பது தொடர்பாக கமுதி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ஆய்வு செய்து கொண்டிருந்தபோது திமுக ஒன்றியசெயலாளர் வாசுதேவன் தரப்பினருக்கும் தவெக மாவட்ட செயலாளர் மன்மதன் தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாம் இதனை தொடர்ந்து திமுகவினர் மன்மதன் வீடுமீது நாற்காலி கற்களை எறிந்தும் கட்டைகள் இரும்புக்கம்பிகளால்கொலைமிரட்டல் விடுத்துள்ளனர் அப்போது ஏற்பட்ட கைகலப்பில் ஆனந்தவள்ளி இந்திராகாந்தி வசந்தி உள்ளிட்ட 3 பெண்கள் காயமடைந்து கமுதி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர் வசந்தி தீவிர சிகிச்சைக்காக ராமநாதபுரம் மருத்துவகல்லுரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் இது தொடர்பாக இருதரப்பினர் அளித்த புகாரின் பேரில் மண்டலமாணிக்கம் போலீசார் 24 நபர்கள் மீது வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர் இந்த சம்பவம் தொடர்பாக சின்னஉடப்பங்குளத்தில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button