கீழக்கரையில் அமைச்சருக்கு தவெக நகர் சார்பில் உற்சாக வரவேற்பு

கீழக்கரையில் அமைச்சருக்கு தவெக நகர் சார்பில் உற்சாக வரவேற்பு

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரைக்கு வருகை தந்த மீன்வளம் மற்றும் மீனவர் நலன் துறை அமைச்சர் ஸ்ரீநாத்துக்கு, தமிழக வெற்றிக் கழகம் நகர் கட்சி நிர்வாகிகள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தாசிம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அமைச்சர் ஸ்ரீநாத் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். விழா அரங்கிற்கு வருகை தந்த அமைச்சருக்கு, அனைத்து சமுதாய மக்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் சால்வை அணிவித்தும், மலர் கொத்து மற்றும் பொன்னாடை வழங்கியும் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட செயலாளர் மலர்விழி ஜெயபாலா தலைமையில், கீழக்கரை நகர் செயலாளர் ஆசிக் ரஹ்மான் ஏற்பாட்டில் நகர், ஒன்றிய மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர்.
தொழிலதிபர் புகாரி, தமிழக வெற்றி கழக கீழக்கரை நகர செயலாளர் ஆசிக் ரஹ்மானுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.
இந்நிகழ்வில் துணை செயலாளர் ஆயிஷா பானு, நகர நிர்வாகி முபித், இளைஞர் அணி அமைப்பாளர் முஜீப், கொள்கை பரப்பு செயலாளர் கிஷோர், தகவல் தொழில் நுட்ப அணி தினேஷ், செயற்குழு உறுப்பினர் சங்கர பாண்டி, 10-வது வார்டு செயலாளர், 4-வது வார்டு செயலாளர் மணிகண்டன், 2-வது வார்டு செயலாளர் ராஜவேலு, 1-வது வார்டு செயலாளர் அபு மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
மேலும், தாசிம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி முதல்வர் மற்றும் நிர்வாகிகள், சமூக அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய அமைச்சர் ஸ்ரீநாத், “கீழக்கரை பகுதியின் வளர்ச்சிக்கு தமிழக அரசு முன்னுரிமை அளித்து வருகிறது” என உறுதியளித்தார். மேலும், பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட அவர், அவை படிப்படியாக பரிசீலிக்கப்பட்டு நிறைவேற்றப்படும் எனத் தெரிவித்தார்.
விழாவின் இறுதியில் கல்லூரி நிர்வாகம் சார்பில் அமைச்சருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.




