இராமநாதபுரம்

போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி  நடைபெற்றது!

போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி  நடைபெற்றது!

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா,
எஸ்.பி. பட்டினம் பகுதியில் போதைப்பொருட்களின் தீமைகள் குறித்த விழிப்புணர்வை பொதுமக்கள் மற்றும் இளைஞர்களிடையே ஏற்படுத்தும் வகையில் பிரம்மாண்ட போதை ஒழிப்பு பேரணி நடைபெற்றது.

இப்பேரணியை எஸ்.பி. பட்டினம் காவல் ஆய்வாளர் முத்துக்குமார் தலைமை தாங்கி, கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

​சார்பு ஆய்வாளர் ரமேஷ்,
​சிறப்பு சார்பு ஆய்வாளர் பாலு தலைமை ஆசிரியர் பட்டுஆகியோர் முன்னிலை வகித்து பேரணியை வழிநடத்தினர்.

பேரணியில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள் “போதைப்பொருள் ஒழிப்போம், சமுதாயத்தைக் காப்போம்”, “நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போதை” போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனர்.

பேரணியின் நிறைவில் பேசிய காவல் ஆய்வாளர் முத்துக்குமார்”இன்றைய இளைய சமுதாயம் போதைப்பொருள் என்ற அரக்கனிடமிருந்து தங்களைக் காத்துக் கொள்ள வேண்டும். போதைப்பொருள் புழக்கம் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் உடனடியாக காவல்துறைக்கு அறிவிக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.

கிராமப்புற மற்றும் நகர்ப்புற இளைஞர்கள் போதைப்பாதையில் செல்வதைத் தடுத்து, அவர்களின் எதிர்காலத்தை நல்வழிப்படுத்துவதே இந்த பேரணியின் முக்கிய நோக்கமாகும்.
​இப்பேரணியில் காவல்துறை காவலர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு போதைக்கு எதிரான தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button