இராமநாதபுரம்

கீழக்கரையில் பரபரப்பு – 74 ஆடுகளை திருடிய கும்பல் சிக்கியது! 4 பேர் கைது

கீழக்கரையில் பரபரப்பு – 74 ஆடுகளை திருடிய கும்பல் சிக்கியது! 4 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சுற்றுவட்டாரத்தில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த ஆடு திருட்டு கும்பலை போலீசார் சுற்றிவளைத்தனர்.

கடந்த சில நாட்களாக கீழக்கரை பகுதியில் தொடர் ஆடு திருட்டு சம்பவங்கள் நடந்து வந்தன. இதனால் கால்நடை வளர்ப்போர் கடும் பீதியில் இருந்தனர்.

இந்நிலையில், திருடிய ஆடுகளை விற்க பரமக்குடி ஆட்டுச் சந்தைக்கு கொண்டு வந்தபோது கும்பல் வசமாக சிக்கியது. ஆடுகளை பறிகொடுத்த உரிமையாளர்களே சந்தையில் தங்கள் ஆடுகளை அடையாளம் கண்டு கீழக்கரை போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

உடனடியாக களமிறங்கிய போலீசார், கீழவலசை செல்வம், அவர் மனைவி பவித்ரா, லட்சுமிபுரம் ராமநாதன், கீழக்கரை ஸ்ரீநகர் தமிழரசன் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.அவர்களிடம் இருந்து 61 ஆடுகள் ,13 குட்டி ஆடுகள்
மொத்தம்: 74 ஆடுகள் மீட்கப்பட்டு
கைதானவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த திருட்டு சம்பவத்தில் மேலும் சிலருக்கு தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button