உலகம்

ஷார்ஜாவில் கிரீன் குளோப் அமைப்பு சார்பில் நடந்த ரத்த பிளேட்லெட் சிறப்பு முகாம்

ஷார்ஜாவில் கிரீன் குளோப் அமைப்பு சார்பில் நடந்த ரத்த பிளேட்லெட் சிறப்பு முகாம்

ஷார்ஜா :

உதிர தானம் மனிதநேய பணிகளில் மிக சிறந்தது என்பதை பறைசற்றும் விதமாக, உதிர தான குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தொடர்ந்து இரத்த தான முகாம்களை நடத்திவரும் சமூக சேவை அமைப்பான துபாய் கிரீன் குளோபின் அடுத்த முன்னெடுப்பாக, உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு 14.07.2026 ஞாயிறு அன்று இரத்த பிளேட்லெட் தான முகாம் ஷார்ஜா முவைலா பகுதியில் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கிரீன் குளோப் நிறுவனர் ஜாஸ்மின் அபூபக்கர் தலைமை தாங்கினார்.
நிகழ்வில் பலர் கலந்துகொண்டு பிளேட்லெட் மற்றும் பிளாஸ்மா தானம் செய்தனர்.

நிகழ்ச்சியில் சுசித்ரா & ஊர்வசி ( போகோ குரூப் நிறுவனம் ),
ஆசிப் ( டி ஜி ஏ நிறுவனம் நிதி மேலாளர் ) ,மணவாளன் ( தனியார் நிறுவன நிதி மேலாளர் ) , ஷமீர் ( சாம்கோ நிறுவனம் ) ஷாஹித் ( நிர்வாக இயக்குனர் ( பா நிறுவனம் ) நிஷாத் ( நம்ஜத் அல்நூர் டைப்பிங் நிறுவனம் ), மாஜிதா ( பிளசண்ட் டூர்ஸ் அண்ட் ட்ராவெல்ஸ்) ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை கிரீன் குளோப் உறுப்பினர்கள் பீர் முஹம்மது, சபீர், அபு பக்கர் மற்றும் ஜிப்ரீல்,முகம்மது உஸ்மான் நவீஸ் சங்கரா, சுப்புராஜ், ஹபீப் உள்ளிட்ட தன்னார்வளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
கொடையாளர்கள் உட்பட அனைவருக்கும் பழங்கள், உணவு வழங்கப்பட்டது. இறுதியில் நிகழ்வு சிறக்க ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் கிரீன் குளோப் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button