கவிதைகள் (All)

பச்ச உடையழகி

பச்ச உடையழகி
பசப்பிக்கிட்டு போறியடி…

ஊதா நிறத்த வச்சு
உசுப்பி விட்டு போறயடி.

விரல் பட்ட பயிரெல்லாம்
வீரியம் கொள்ளுதடி.

உன் வயிர நிரப்பத்தான்
என்னையும் பாரேன்டி.

ஓடையில ஓடும் தண்ணீ
ஒனக்காக தானேன்டி.

கோடையில நீர் தேடும்
கொக்கே நீ வாயேன்டி.

அத்த பெத்த மத்தளமே…
அழகான பொன்குடமே.

சத்தம் ஏதும் போடாம
சட்டுனு நீ வந்துவிடு.

முத்தச்சத்தம் கேட்காமல் முந்தானையால் மூடிவிடு.

தயக்கம் கொள்ளாதே…
தமிழ் மொழியின் உயிரெழுத்தே.

உன்னுயிர் நானென்று
ஓசையில சொல்லிவிடு.

ஆசையில நான் தானே…
அங்குமிங்கும் உழவுகின்றேன்.

உழைக்க வலிமை உண்டு
உழைத்து வாழ வயலும் உண்டு.

ஏர் பூட்டும் உன்னவனை… ஏரிட்டுப்பாரேன்டி.

என்கரத்தில் உன் பாதம்
படும் காலம் வந்துவிட்டால்…(மிஞ்சி)

நம்மிடத்தில் தோன்றிவிடும் நட்சத்திரம் அமிழ்தாக..(குழந்தை)

அரும்புக்கவி
அன்வர் உசேன்
இராமநாதபுரம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button