கவிதைகள் (All)

லைலத்துல் கதர் இரவு – அத்தாவுல்லா

இறைவா! இறைவா!

இன்று இரவு
இஷா அல்லாஹ்
இன்னிய லைலத்துல் கதர் இரவு!

இறைவா!
எல்லாம் வல்லவா!
உன் அருட் கொடையின்
மகத்துவமிக்க
இந்த இரவின் பொருட்டால்
எங்கள் பெற்றோரை மன்னிப்பாயாக!
உன்னிடம் வந்து விட்ட
எங்கள் மூத்தோரையும்
முன்னோரையும் மன்னிப்பாயாக!

அவர்களது மறுமை வாழ்வை
மகத்துவமிக்க
சுவனத்து வாழ்வாக
ஆக்கி அருள்வாயாக!

இன்னும் எங்களையும்
எங்கள் மனைவி மக்கள்
மற்றும் சந்ததியினரையும் மன்னிப்பாயாக!

மற்றும் எங்கள் சகோதரர்கள்
குடும்பத்தினர்
உறவினர்கள் நண்பர்களையும்
மன்னிப்பாயாக!

எங்கள் சமுதாய
மக்களையும் மன்னிப்பாக!

இந்த பாக்கியமிக்க
இரவின் நன்மைகளையும்
ரமளானின் நன்மைகளையும்
அடைந்து கொள்ளும் பாக்கியத்தை
முழுவதுமாக வழங்குவாயாக!

உனது அருட்கொடைகளை
எங்கள் மீது
அனுதினமும் பொழிந்தருள்வாயாக !

அனைத்துலக முஸ்லிம்களிடம்
ஒற்றுமை உணர்வை
ஓங்கச் செய்வாயாக!

உலக முஸ்லிம்களுக்கு
வெற்றியை வழங்குவாயாக!

உனது இனிய தூதர்
எங்கள் கண்மணி நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் பொருட்டால்
எங்கள் இம்மை மறுமையை
அழகான வாழ்வாக ஆக்கி
அருள்புரிவாயாக!

ஆமீன் ! ஆமீன்!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button