கவிதைகள் (All)

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

தவம் புரிந்து வாங்கிய வரத்தால்

தலைக்கனம் கொண்ட அசுரன்

தரணியில் மாந்தருக்கெல்லாம்

கொடுமைகள் பல புரிந்தான். 

தவறுகள் செய்பவன் தன்

தனயனே ஆனாலும் அவனுக்கு 

தண்டனை உண்டென்னும்

தத்துவத்தை இந்தத் 

தரணிக்கு உணர்த்திடும் பண்டிகை

தீபாவளி என்பதறிவோம். 

புத்தாடை உடுத்து பலவகை

பட்சணங்கள் செய்து உண்டு 

பட்டாசுகள் வெடித்து அனைவரும்

பரவசமாய்க் கொண்டாடிடுவோம்.

தீபங்களை வரிசையாக ஏற்றி வைத்து 

தீய இருளகற்றி ஒளிரச்செய்வோம். 

பருத்தி , பட்டு நெசவாளர்களும்

பட்டாசுத் தொழிலாளர்களும்

பட்சணங்கள் செய்பவர்களும் 

பல்வித வர்த்தகத்தோரும்

பயன்பெறும் பண்டிகையன்றோ. 

காற்று மாசுபடாவண்ணம் 

பசுமைப்பட்டாசுகள் விடுவோம். 

ஒலி மாசு ஏற்படா வண்ணம் 

ஒலி குறைந்த பட்டாசுகள் வெடிப்போம். 

மருத்துவப் பயனாளிகளும் 

முதியோரும் ,சிசுக்களும் 

பாதிக்கப்படா வண்ணம் 

பண்டிகையைக் கொண்டாடிடுவோம்.

பாதுகாப்பைக் கடைபிடித்து

விபத்துகள் தவிர்த்திடுவோம். 

அன்புடன் வாழ்த்தும்,

சிலேடை சித்தர் சேது சுப்பிரமணியம்.

19.10.2025.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button