General News
இறை நபிகாட்டிய ரமலானிலே
இறை நபி
காட்டிய ரமலானிலே.
இன்னல்கள்
மறையும் ரமலானிலே
நன்மைகள்
மலையாய்
கொட்டி கிடக்குது
ரமலானிலே.
நம் இறைவனின்
அருளும்
நம்மை சேருமே
இந்நாளிலே.
இதயங்கள்
இதமாகுமே
ரமலானிலே.
இல்லங்கள் தோறும்
இறை வேத
இன்னிசை அரங்கேறுமே.
கரங்கள் தோறும்
கருணை மழை
வழிந்தோடுமே…
கருணையாளனின்
அன்பிற்காக
மனம் எங்குமே.
சைத்தானின்
கைகளுக்கு பூட்டு போட்டு…
சங்கையான
வணக்கத்திற்கு
வழிகாட்டுமே…
பசியின்
உணர்வை
உடலுக்கு வழங்கி…
படைத்தவன்
அருளை
உணர்த்தும் ரமலானே.
தொடரும்…
அரும்புக்கவி..
அன்வர் உசேன்
அஜந்தா டெக்ஸ்டைல்ஸ்
ராமநாதபுரம்.