இராமநாதபுரம்

பரமக்குடி மற்றும் கமுதியில் கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவமனை புதிய கட்டுமானங்களை ஆய்வு செய்தார் ஆட்சியர்

பரமக்குடி மற்றும் கமுதியில் கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவமனை புதிய கட்டுமானங்களை ஆய்வு செய்தார் ஆட்சியர்

இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் இன்று (05.06.2026) பொதுப்பணிதுறையின் மூலம் ரூ.57.50 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் அரசு தலைமை மருத்துவமனை கட்டடத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.M.சிவகுரு பிரபாகரன்,இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

உடன் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் திரு.குருதிவேல் மாறன் அவர்கள், அரசு தலைமை மருத்துவ அலுவலர் மரு.முத்தரசன் அவர்கள் ஆகியோர் உள்ளனர்.

அதைத்தொடர்ந்து கமுதி அரசு மருத்துவமனையில் பொதுப்பணித்துறையின் மூலம் ரூ.3.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கூடுதல் மருத்துவ கட்டடங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.M.சிவகுரு பிரபாகரன்,இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

உடன் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திரு.திவ்யான்ஷீநிகம்,இ.ஆ.ப., அவர்கள், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் திரு.குருதிவேல் மாறன் அவர்கள் ஆகியோர் உள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button