ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஜே ஜே நகரில் குடிநீருக்காக மூன்று கிலோமீட்டர் செல்லும் அவலம்…..

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஜே ஜே நகரில் குடிநீருக்காக மூன்று கிலோமீட்டர் செல்லும் அவலம்…..

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஜே ஜே நகரில் காவேரி குடிநீர் வசதி இல்லாததால் 3 கிலோ மீட்டர் சென்று தள்ளு வண்டியில் தண்ணீர் பிடித்து செல்லும் அவல நிலை உள்ளது. இந்த ஜே ஜே நகரில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர் இங்கு கடந்த பல ஆண்டுகளாக காவேரி குடிநீர் வசதியின்றி தினமும் டிராக்டர் தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்துகின்றனர். பலர் 3- கிலோ மீட்டர் நடந்தே சென்று தள்ளி வண்டியில் காவிரி குடிநீர் பிடித்து வந்து மக்கள் பயன்படுத்துகின்றனர். அப்பகுதியைச் சேர்ந்த திவாகர் கூறுகையில் டிராக்டர் தண்ணீரை குடம் ரூபாய் 15.க்கு வாங்கி பயன்படுத்துகின்றனர் குடிநீருக்காக சிரமப்படும் நிலை உள்ளது எனவே ஜே ஜே நகர் பகுதியில் காவேரி குடிநீர் வசதி ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.




