கவிதைகள் (All)

கண்ணீர் மழையும்

கண்ணீர் மழையும்
கல்புறுகும் உழவனும்

ஏழ வரிய
ஏளனமாய் பாத்ததுக்கு
ஏத்தமுடைய றகுமான்
ஏத்துறாண்டி கரு மேகத்த
ஊத்திய மழ வெள்ளத்த
பாத்தியாடி என்ற
பாத்தும்மா

வெளஞ்சி நிண்ட வெள்ளாம
குலஞ்சி கிடக்கிதுகா
நனஞ்சி மழயில
எங்கட
உசிரெல்லாம்
உல்லுக்கம்பு குத்துதுகா

நெல்லுக்கும் வெலயில்ல
நெலமெல்லாம் வெள்ளக்காடு
சொல்ல முடியாதும்
சொக்கித் தவிக்கிறேன்
பாத்தும்மா

ராவயில நெல்லு வெட்டி
ரகசியமாய் வித்து வந்தேன்
களவெட்டி ஏழைகள்
கண்டத்துக்கு வர முன்னே
ஏத்தமுடன் ஊடு வந்தேன்.
இதை பொறுக்காத நாயன்
வெள்ளத்தால் அழிக்கிறானோ
பாத்தாயாடி பாத்தும்மா

பொத்துவில் தாஜஹான்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button