கீழக்கரை பேர்ல் பள்ளியின் 32 ஆம் ஆண்டு விளையாட்டு விழா

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பேர்ல் பள்ளியின் 32 ஆம் ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது இதில் கீழக்கரை ஆய்வாளர் பத்மநாபன் கலந்து கொண்டு சிறப்பித்தனர் மேலும் விளையாட்டில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளையும் வழங்கி மாணவர்கள் மத்தியில் சிறப்புரையாற்றினார், காவல் ஆய்வாளர் பத்மநாபன் பள்ளியில் விளையாட்டு விழாவில் உரையாற்றும் போது விளையாட்டின் முக்கியத்துவம் விளையாட்டு மாணவர்களின் உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு மிகவும் முக்கியம் என்று கூறினார் தன்னம்பிக்கையை வளர்க்க உதவுகிறது என்று வலியுறுத்தினார்.
மாணவர்களுக்கு ஊக்கம் மாணவர்களை விளையாட்டில் பங்கேற்கவும், தங்கள் திறமையை வளர்க்கவும் ஊக்குவித்து பேசினார்
விளையாட்டு நிகழ்ச்சிகளில் பாதுகாப்பு மற்றும் ஒழுக்கத்தை பராமரிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார், இந்நிகழ்வில் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.





