நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம்

இராமநாதபுரம் மாவட்டம் சித்தார் கோட்டை முகம்மதியா மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பில் சித்தார்கோட்டை ஊராட்சியில் சிறப்பு முகாம் கடந்த 26.09.25 முதல் நடைபெற்று வருகிறது.
இந்நிகழ்ச்சியில் இன்று (29.09.25) இராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (பொ) திரு. பிரின்ஸ் ஆரோக்கியராஜ் அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சிறப்புரை ஆற்றினார்கள். நாட்டு நலப்பணித் திட்டத்தில் மாணவர்களின் பங்கு என்ன? அதை எவ்வாறு செயல்படுத்தலாம் போன்ற பல்வேறு கருத்துகளை மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்கள். உடன் நாட்டு நலப் பணித் திட்ட மாவட்ட தொடர்பு அலுவலர் திரு. மங்களநாதன், முகாம் அலுவலர் முஹம்மது சலீம், முகம்மதியா மேல்நிலைப்பள்ளி இடைநிலை உதவி தலைமை ஆசிரியர் முகம்மது சுகைப், தமிழாசிரியர் செய்யது இப்ராகிம், உடற்கல்வி ஆசிரியர் அஜீஸ் கனி ஆகியோர் பங்கேற்றனர்.





