பரமக்குடி லஞ்சம் 50,000 வாங்கிய (பி.டி.ஓ) துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கைது

பரமக்குடி லஞ்சம் 50,000 வாங்கிய (பி.டி.ஓ) துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கைது

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகாவை சேர்ந்த புகார்தாரர் எஸ். அண்டக்குடி ஊராட்சியில் உள்ள இடத்தை இராமநாதபுரம் நகர ஊராமைப்புத்துறையில் மனையிட அனுமதி பெற்றுள்ளார். அதனைத்தொடர்ந்து அரசுக்கு உள்ளாட்சி மனை வரன்முறைப்படுத்தல் கட்டணமாக ரூ. 3,47,800/-ஐ கடந்த மாதம் செலுத்தியுள்ளார்.மேற்படி இடத்திற்கு உள்ளாட்சி அனுமதி பெற கடந்த வாரம் பரமக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் பிடிஓ அன்புக்கண்ணனை சந்தித்து விவரம் கேட்ட போது அவர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கோவனை 49/25 பாருங்க என கூறியுள்ளார். மேற்படி இளங்கோவனை சந்தித்து விவரம் கேட்ட போது ஒரு வாரம் கழித்து வாங்க என விவரம் கூறியுள்ளார். பின்பு துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) இளங்கோவனை பார்த்து விவரம் கேட்ட போது உங்க பைல் ரெடியாகூணும்னா எனக்கும், அலுவலகத்தில் உள்ளவர்களுக்கும் சேர்த்து ரூ. 1,00,000/- ம் கொடுத்தால் தான் உங்களுடைய பிளாட்டுகளை மனையிட வரன் முறைப்படுத்த அனுமதி பிடிஒவிடம் பெற்று தரமுடியும் என கரராக கூறியுள்ளார். பின்பு மீண்டும் நேற்று காலை துணை வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கோவனை பார்த்து விவரம் கேட்ட போது, அவர் ஏற்கனவே தான் கேட்ட பணம் ரூ. 1,00,000/-ஐ கொடுத்து விட்டு உங்க ஆர்டரை வாங்கி கொள்ளுங்கள் என கூறியுள்ளார். அதற்கு புகார்தாரர் அவ்வளவு பணம் என்னால் முடியாது சொன்னதற்கு, அவர் இன்னைக்கு சாயங்காலம் ரூ. 50,000/-ம் கொடுங்க மீதி பணம் ரூ. 50,000/- ஐ வரும் வெள்ளிக்கிழமை கொடுங்க என கரராக கூறியுள்ளார்.
எனவே லஞ்சம் கொடுக்க விரும்பாத மனுதாரர் இராமநாதபுரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு
போலிஸில் புகார் செய்தார். லஞ்ச ஒழிப்பு துறை போலிஸார் அவர்களின் அறிவுத்தலின் பேரில் ரசாயனம் தடவிய பணம் ரூ.50,000/-ஐ துணை வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கோவனிடம் கொடுக்கும் போது லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை டிச,11 அன்று கையும் களவுமாக பிடித்தனர்.
மேற்படி நபர் மீது தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.




