இராமநாதபுரம்

மலேசியா : புலவர் இராமதாசரின் 109 ஆவது பிறந்தநாள் விழா

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் கொழுந்துரையைச் சேர்ந்த பெரும் புலவர் இராமதாசரின் 109 ஆவது பிறந்தநாள் விழா
மலேசியா பினாங்கு பள்ளியில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

மலேசியாவில் முத்தமிழ்ப் புலவர் இராமதாசர் மன்றமும் இராமதாசர் தமிழ்ப்பள்ளி நிர்வாகமும் ஒன்றிணைந்து பெரும் புலவர் இராமதாசரின் 109 வது பிறந்த நாளை இராமதாசர் தமிழ்ப் பள்ளியில் கடந்த 21.11.2025 அன்று நடைபெற்றது.

மலேசிய முத்தமிழ்ப் புலவர் இராமதாசரின் பிறந்தநாள் விழாவை இராமதாசர் தமிழ்ப் பள்ளியில் கொண்டாடுவது சாலப் பொருந்துமென பேராசிரியர் டாக்டர் ரவிச்சந்திரன் மாணிக்கம் பெருமிதத்துடன் கூறினார். தனது தலைமை உரையில் இவ்வுலகில் தமிழ் இருக்கும் வரை பெரும் புலவர் இராமதாசர் பெயர் நிலைத்திருக்குமெனக் கூறினார்.
மேலும் பெரும் புலவர் இராமதாசர் ஆய கலைகளில் அறுபத்துநான்கில் ஐம்பத்தோறு கலைகளை தீர கற்றவர் என்ற போதிலும் பினாங்கு இளைஞர்களுக்கு சிலம்பம்,மல்யுத்தம்,வர்மம் போன்ற கலைகளைப் பயன் பெற அவர்களுக்கு கற்றுத்தந்தவர் எனக்கூறி,  நீண்ட காலமாக பினாங்கு ஜலான் சுங்கையில் இயங்கும் தமிழ்ப்பள்ளியை பெயர் மாற்றம் செய்தவர்கள் பினாங்கு மாநிலத்தின் துணைத் தலைவர் பேராசிரியர் டாக்டர் பொ.ராமசாமியும் மலேசிய முத்தமிழ்ப் புலவர் இராமதாசர் மன்றத்தலைவர் கவிஞர் பெ.க. நாராயணனும் அவர் தம் செயற்குழு உறுப்பினர்கள் எனப் பதிவு செய்தார். பெரும் புலவர் இராம்தாசர் பினாங்கு ராஜமாரியம்மன் ஆலயத்தை புதுப்பித்து செந்தமிழ்ப் இளந்தமிழ்ப் பாடசாலை என்றும் செந்தமிழ் கலாநிலையம் என்றும் இரண்டு பிரிவுகளாக பிரித்து போதித்தார் எனக் கூறினார்.

அடுத்து, இராமதாசர் தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியர் பி.வினோத் உரையாற்றுகையில் பெரும்புலவர் இராமதாசரின் 109 வது பிறந்தநாள் விழாவைக் கொண்டாடுவது இப்பள்ளி நிர்வாகம் மகிழ்ச்சி கொள்கிறது என அவர் கூறினார்.
அவர் மேலும் கூறுகையில் இவ்விழாவில் அரும்பணிகளாற்றிய இப்பள்ளியின் ஆசிரியர்களுக்கும் தாம் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளதாக அவர் சொன்னர்
இவ்விழாவில் மலேசிய முத்தமிழ்ப்புலவர் இராமதாசர் மன்றத் தலைவர் தமது உரையில், சுவாமி இராமதாசர் இந்து மத நூல்களை கொண்டிருந்த பயிற்சியைப் போலவே பிற மத நூல்களிலும் தேர்ச்சி பெற்றிருந்தார்.அவரின் சீறாப்புராணம் சொற்பொழிவுகளை சிங்கப்பூர் இஸ்லாமியர்களால் வெகுவாகப் பாராட்டப்பெற்றன என அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் கவிஞர் மா.தமிழன்பன் கவிஞர் ஞானராயப்பனுக்கும் வாழ் நாள் விருதும் பணமுடிப்பும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கவிஞர் நா.கு.முல்லைச்செல்வன் பெரும் புலவர் இராமதாசரின் கலை இலக்கியப் பணிகள் குறித்து வாழ்த்துக் கவிதை வாசித்தார்.
இந்நிகழ்ச்சியில் கவிஞர் கோவதன் உட்பட இராமதாசர் பள்ளியில் கல்வியை போதிக்கின்ற ஆசிரியர்களும் மாணவர்களும் பெற்றோர்களும் அதிகமானோர் கலந்துகொண்டனர் என்ற தகவலை பெரும்புலவர் இராமதாசர் பற்றி ஆய்வு மேற்கொண்டு வரும் முதுகுளத்தூர் ஆய்வாளர் பேராசிரியர் சே.முனியசாமி தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button