பரமக்குடி பள்ளியில் உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகம் சட்டமன்ற உறுப்பினர் திறந்து வைத்தார்.

பரமக்குடி பள்ளியில் உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகம் சட்டமன்ற உறுப்பினர் திறந்து வைத்தார்.

தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை சார்பில் நடுநிலைப் பள்ளிகளுக்கு உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகம் வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பரமக்குடி நகராட்சி மஞ்சள் பட்டினத்தில்
உள்ள ஸ்ரீ ரெங்கன் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் இந்த ஹைடெக் லேப்டாப் எனப்படும் உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகத்தில் 10 கம்ப்யூட்டர் 20 ஹெட்போன்ஸ் 10 வெப் கேமரா ஒரு ப்ரொஜெக்டர் 100 MBPS வேகத்துடன் கூடிய இணைய இணைப்பு மற்றும் யுபிஎஸ் சிஸ்டம் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது.அதனை பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் பரமக்குடி நகர் மன்ற தலைவர் சேது கருணாநிதி , பரமக்குடி வடக்கு நகர கழக செயலாளர் ஜீவரத்தினம்,போகலூர் மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் குணசேகரன்,வட்டார கல்வி அலுவலர்கள் திரு சூசை ராஜ், மற்றும் திருமதி ஜெயா, தலைமை ஆசிரியர் ஜோசப் அமல்ராஜ் மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் தேவகிட்டு மற்றும் ரமேஷ் கழக நிர்வாகிகள் வன்னிசெல்வன் மற்றும் ஆசிரியப் பெருமக்கள் பள்ளி மாணவர்கள் உடன் இருந்தனர்.



