தமுமுக மாவட்ட ஆலோசனை கூட்டம்

தமுமுக மாவட்ட ஆலோசனை கூட்டம்

இராமநாதபுரம் மத்திய மாவட்டத்தின் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தலைவர் பிரீமியர் இப்ராஹிம் தலைமையில் நடைபெற்றது.சிறப்பு அழைப்பாளராக
தமுமுக மாநிலதுணை பொது செயலாளர் எஸ்சலிமுல்லாஹ்கான், இஸ்லாமிய பிரச்சார பேரவை மாநில செயலாளர் மௌலவி அப்துல்காதர்_மன்பஈ அவர்களும் கலந்து கொண்டனர்.இதில் பல்வேறு
தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது
மாவட்டத்தில் உறுப்பினர் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதற்கு கிளை வாரியாக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டது.
இஸ்லாமிய சிறைவாசிகளுக்கு தற்காலிக (பரோல்) வழங்கிய தமிழக_முதல்வருக்கு நன்றி தெரிவித்தும்.நிரந்தரமாக விடுதலையாக தமிழக முதல்வர்
அவர்கள் ஆவணம் செய்ய வேண்டும்.
தமுமுக பேர் அமைப்பின் ஆரம்பகாலத்தில் சிறப்பாக பணியாற்றிய சகோதரர் புர்கான், பிஸ்மில்லாகான் மீண்டும் தாய் கழகத்தில் தன்னை இணைத்து கொண்டனர்.இராமநாதபுரம் வெளிப்பட்டினம் பாம்பூரணி சுற்றிலும் உள்ள பொதுமக்களுக்கு குடியிருப்பு பட்டா வழங்க வேண்டும். ஊரணியை சுற்றிலும் பொதுமக்கள் நடை பயிற்சி செய்யவும், ஓய்வெடுக்க பூங்காவும் அமைக்க வேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்நிகழ்வில்
மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட துணை நிர்வாகிகள், மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள், மாவட்ட அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.




