சிக்கல் பகுதியில் எஸ் டி பி ஐ கட்சி கிருஷ்ணாபுரம் கிளை சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்

சிக்கல் பகுதியில் எஸ் டி பி ஐ கட்சி கிருஷ்ணாபுரம் கிளை சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்

இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட தனிச்சியம் ஊராட்சி,டி,கிருஷ்ணாபுரம் கிராமத்தில்
கண்மாயை ஆழப்படுத்துதல் என்ற பெயரில் ஊருணியை உடைக்க முயற்சி செய்யும் அரசு அதிகாரிகளை கண்டித்தும் சாலை போடுதல் என்ற பெயரில் ஊருணிக்கரையை உடைக்க முயற்சி செய்ததன் காரணமாக
விளக்கம் கேட்ட எஸ் டி பி ஐ கட்சி மாவட்ட செயலாளர் ராஜா முஹம்மது தரக்குறைவாக பேசிய கிராம நிர்வாக அலுவலரை கண்டித்தும் எஸ் டி பி ஐ கட்சி கிருஷ்ணாபுரம் கிளை சார்பில் , சிக்கல் இசிஆர் சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் சிக்கல் பஞ்சாயத்து கமிட்டி தலைவர் முஹம்மது இல்யாஸ் தலைமையில் நடைபெற்ற இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் காஜா முஹைதீன் அவர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பினார்.
எஸ் டி பி ஐ கட்சி இராமநாதபுரம் மேற்கு மாவட்ட தலைவர் நூருல் அமீன் மற்றும் மாவட்ட செயலாளர் ராஜா முஹம்மது ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
மாவட்ட பொதுச்செயலாளர் பாஞ்சுபீர் , மாவட்ட துணைத்தலைவர் மௌலவி மீரான் முஹைதீன் மன்பஈ , மாவட்ட பொருளாளர் செய்யது சதக்கத்துல்லா , முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி தலைவர் முஹம்மது ரபீக் , தொகுதி செயலாளர் சத்தார் மைதீன் , தொகுதி இணைச் செயலாளர்கள் சுல்த்தான் செய்யது இப்றாகிம் & முசாபர் அலி,
எஸ் டி டி யூ தொழிற்சங்க மாவட்ட தலைவர் ரஷீத்கான் , மாவட்ட செயலாளர் காஜா ஷரீப் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், கிருஷ்ணாபுரம் ஜமாஅத்தார்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.எஸ் டி பி ஐ கட்சி முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி செயற்குழு உறுப்பினர் அரபி முஜிபுதீன் நன்றியுரையுடன் ஆர்ப்பாட்டம் நிறைவுற்றது.




