முதுகுளத்தூர்

பெண்களுக்கான சிறப்பு பயான்

பெரிய பள்ளிவாசல் ஜமாஅத் ஹிம்மத்துல் இஸ்லாம் நிஸ்வான் மஜ்லிஸ் பெண்கள் தொழுகை பள்ளிவாசலில் 31/08/2025 ஞாயிற்றுக்கிழமை மஃக்ரிப் தொழுகைக்கு பிறகு இளையான்குடி பெண்கள் மதரசாவில் பணிபுரியும் சிறப்பு பேச்சாளரை கொண்டு நமது நிஸ்வான் பள்ளிவாசலில் ஆலிமா பட்டத்திற்கான துவக்க நிகழ்ச்சி மற்றும் சிறப்பு பயான் நடைபெற்றது.

பெரும்பான்மையான பெண்கள் வருகை தந்து சிறப்பித்தார்கள், அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் நமது பெண்கள் தொழுகை பள்ளியில் ஆரம்பம் செய்ய உள்ள ஆலிமா பட்டய வகுப்பிற்கான சேர்க்கையில் 24 பெண்கள் தங்களது பெயரை பதிவு செய்து சிறப்பித்தார்கள். அவர்களுக்கான வகுப்புகள் ஆரம்பம் செய்யப்பட்டுள்ளது. முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசலின், ஹிம்மத்துல் இஸ்லாம் வாலிபர் சங்கத்தின் முயற்சியில் இந்த பணிகள் நடந்து வருகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button