முதுகுளத்தூர் ஶ்ரீ வடக்கு வாசல் செல்லி அம்மன் கோவிலில் 8000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்

முதுகுளத்தூர் ஶ்ரீ வடக்கு வாசல் செல்லி அம்மன் கோவிலில் 8000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருள்மிகு ஸ்ரீ வடக்கு வாசல் செல்லி அம்மன் கோவில் 49 ஆம் ஆண்டு பூச்சொரிதல் விழா கோலகலமாககொண்டாடப்பட்டு வருகிறது
9ம் நாளான இன்று பக்தர்கள்பால்குடம் எடுத்தும் அம்மனுக்குதங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினார்கள்
கடந்த ஜூலை, 30ம் தேதிமுதுகுளத்தூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ வடக்கு வாசல் செல்லி அம்மனுக்கு
கொடியேற்றத்துடன் பூச்சொரிதல் விழா துவங்கியது
இந்த விழாவில் முதுகுளத்தூர் தூரி செல்வநாயாகபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்இருந்து 8000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் சுப்பிரமணிய சுவாமி ஆலயத்திலிருந்து பால்குடம்எடுத்து புறப்பட்டு காந்தி சிலை பேருந்து நிலையம் வழி விடுமுருகன் கோயில் அய்யனார் கோவில் வழியாக ஊர்வலமாக சென்று ஶ்ரீவடக்கு வாசல் செல்லி அம்மன் கோவிலை நோக்கிபால்குடத்தை தலையில் சுமந்தவாறு கோவிலைவந்தடைந்து நேர்த்திக்கடனை செலுத்தினார்கள்
திருவிழாவில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த ஏராளமான போலீசார்பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றது




