இராமநாதபுரம்
மின்சாரம் தாக்கி விவசாயி பலி

மின்சாரம் தாக்கி விவசாயி பலி

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள மேலத்தூவல் -கிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்த சித்திரவேல் என்பவர் இன்று (ஆகஸ்ட் 2) அவரது ஆட்டுக் கிடைக்கு வந்துள்ளார். ஏற்கனவே தாழ்வாக தொங்கி தரையில் கிடந்த மின்கம்பியில் மிதித்ததில் நிகழ்வு இடத்திலேயே உயிரிழந்தார். அவரை காப்பாற்ற வந்த அவரது மகன் கிஷோர்குமார்க்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் சிகிச்சைக்காக ராமநாதபரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது குறித்து கீழத்தூவல் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்




