இராமநாதபுரம்
இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்ற நகர் மன்ற உறுப்பினர் திமுகவில் இணைந்தார்

இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்ற நகர் மன்ற உறுப்பினர் திமுகவில் இணைந்தார்.

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சிக்கு உட்பட்ட எமனேஸ்வரம் 7வது வார்டில் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்ற கவுன்சிலர் குபேந்திரன் திமுக மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்எல்ஏ தலைமையில் தன்னை திமுகவில் இணைத்து கொண்டார். பரமக்குடி எம்எல்ஏ முருகேசன், நகர்மன்ற தலைவர் சேது.கருணாநிதி, வடக்கு நகர் செயலாளர் ஜீவரத்தினம் Mc மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.




