கவிஞர் ஹாஜி மைதீ. சுல்தான்
வந்துவிட்டோம் எனக்கூறும் லெப்பைக் முழக்கம்
வானமெங்கும் எதிரொலிக்கக் கேளீர் கேளீர்
சொந்தங்கள் மறந்தவராய் க’அபத் துல்லாஹ்
சுற்றிவரும் தவாபுகளைக் காணீர் காணீர்
தொங்கோட்டச் சயீயென்னும் தூய செயலால்
துயரெல்லாம் துடைத்தொழிக்கும் காட்சி பாரீர் !
பொங்கிவரும் புதுநிலவாம் அரஃபா மண்ணில்
புதைந்திருக்கும் தத்துவத்தை உணர்வோம் வாரீர் !
வெள்ளைநிற ஆடையிலே கோடி மக்கள்
வெண்புறவாய் ஆடிவரும் அழகின் வண்ணம்
உள்ளமெங்கும் அல்லாஹ்வே படிந்து நிற்க
ஓரணியின் வணக்கம்தான் ஹஜ்ஜின் சின்னம் !
துல்ஹஜ்ஜின் பன்னிரண்டாம் நாளில் கூடி
கல்லெறிந்து சாத்தானைத் துரத்தி விட்டு
எல்லையிலா ஜம்ஜம்நீர் அருந்தி மகிழும்
ஏற்றமிகு ஹாஜிகளே வருக வாழ்க !
நன்றி :
நம்பிக்கை மாத இதழ்
அக்டோபர் 2010
5-வது வரியில் “தூய செயலால்” என்பதை “தூய
நற்செயலால்” என்று வாசித்துப் பாருங்கள் தாள
கதி சரியாக வரும்.
அன்புடன் சாத்.அப்.ஜப்.