இறுதி அஞ்சலி

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (26.2.2026) சென்னை, தியாகராய நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகமான பாலன் இல்லத்திற்கு நேரில் சென்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் – தகைசால் தமிழர் மறைந்த தோழர் ஆர்.நல்லகண்ணு அவர்களின் உடலுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் முழு அரசு மரியாதையுடன் மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினார். இந்நிகழ்வின்போது, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் திரு.வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்,திருமாவளவன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான கு.செல்வப்பெருந்தகை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு. வீரபாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், முன்னாள் அமைச்சர் சட்டமன்ற உறுப்பினர் முனைவர் க. பொன்முடி, நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, பெருநகர சென்னை மாநகராட்சி நிலைக்குழு தலைவர் நே.சிற்றரசு, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் நிறுவனத் தலைவர் தனியரசு, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சார்ந்த நிருவாகிகள் உடனிருந்தனர்.




