இராமநாதபுரம்

காஞ்சிரங்குடி பிரைமரி பொதுக் குழு கூட்டம்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இராமநாதபுரம் மாவட்டம், காஞ்சிரங்குடி பிரைமரி பொதுக் குழு கூட்டம் 16.01.2026 வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையை தொடர்ந்து முஸ்லிம் வாலிபர்கள் சங்க அரங்கத்தில் நடைபெற்றது.

மாவட்டத் தலைவர் ஏ. வருசை முஹம்மது தலைமை வகித்து உரையாற்றினார்.

ஜமாஅத் நிர்வாகிகள் சௌதுல்லா, அன்சர், மன்பவுல் பொது நல சங்க தலைவர் பாசித் கான், செயலாளர் ஜிம்மிஸ் கான் மற்றும் இராமநாதபுரம் நகர தலைவர் காசிம், ஏர்வாடி நகர 11 வது வார்டு தலைவர் பாடகர் அபுதாஹிர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநில துணை செயலாளர் மேலப்பாளையம் பி.எம்.அப்துல் ஜப்பார், மாவட்ட பொருளாளர் முகம்மது யூனுஸ் ஆலிம், மாவட்டத் துணைத் தலைவர் சாதுல்லா கான், மாநில இளைஞரணி துணை தலைவர் நெய்னா முகம்மது, மாநில தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் முகம்மது சாபிர்கான் மற்றும் மாவட்ட இளைஞரணி தலைவர் கதியத்துல்லா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

இக்கூட்டத்தில், பிரைமரி தலைவராக செய்யது சதாம் உசேன், செயலாளராக இமாம் அலி, பொருளாளராக முகம்மது அஸ்லாம், துணைத் தலைவராக தன்ஸில் ரஹ்மான், துணைச் செயலாளராக ரஹ்மத்துல்லா,

இளைஞரணி தலைவராக முகம்மது ஹரிஸ், செயலாளராக சுபேர் அலி, பொருளாளராக முஹம்மது சாஜில், துணை தலைவராக ஆரிப் கான், துணை செயலாளர் அப்துல் அஹதுன் தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளராக முகம்மது அசிம் ஆகியோர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தொடர்ந்து காஞ்சிரங்குடி பிரைமரி அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button