உலகம்

சிங்கப்பூரில் ஜமால் முஹம்மது கல்லூரி பொருளாளர் எம். ஜே. ஜமால் முஹம்மது சாஹிப் அவர்களுக்கு வரவேற்பு

சிங்கப்பூரில் ஜமால் முஹம்மது கல்லூரி பொருளாளர் எம். ஜே. ஜமால் முஹம்மது சாஹிப் அவர்களுக்கு வரவேற்பு

சிங்கப்பூருக்கு வருகைத் தந்திருக்கும் ஜமால் முஹம்மது கல்லூரியின் பொருளாளர், ஹாஜி எம். ஜே. ஜமால் முஹம்மது சாஹிப் அவர்களுக்கு, 18-10-2024 அன்று அக்கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் சிங்கப்பூர் கிளை உறுப்பினர்கள் சந்தித்து வரவேற்பு விருந்தளித்து கௌரவித்தனர்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கல்லூரியின் மாண்புமிகு பொருளாளர் ஜமால் முஹம்மது சாஹிப் அவர்கள், கல்வி சார்ந்த சமூகநலப் பணிகளை ஆற்றி வரும் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை) கடந்த 14 ஆண்டுகளில் 140 நிகழ்ச்சிகளை செய்து சாதனைப் படைத்திருப்பதைக் குறிப்பிட்டு பாராட்டினார்.

கல்லூரி நிர்வாகத்தினரும், பேராசிரியப் பெருமக்களும், முன்னாள் மாணவர்களும் கல்லூரியின் தூண்கள் என்று நினைவு கூர்ந்தார். ஒற்றுமையோடும், நல்லிணக்கத்தோடும், சிங்கப்பூர் சமூகத்திற்கு தொடந்து சேவையாற்றும் மனப்பான்மையோடும் செயல்பட வேண்டும் என்று சிங்கப்பூர் கிளை உறுப்பினர்களை கேட்டுக் கொண்டார்.

நம் நினைவில் வாழும் கல்லூரி நிறுவனர்களாகிய ஜமால் முஹம்மது சாஹிப், காஜாமியான் இராவுத்தர் ஆகியோரின் அறநெறி வழிகளைப் பின்பற்றி 1951ஆம் ஆண்டு முதல் இன்று வரை, திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி ஏழை எளிய மாணவர்களுக்கு பட்டப்படிப்பு உயர்கல்வி வழங்கி அரும்பெரும் கல்விப்பணியாற்றி வருவதில் முன்னிலை வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button