1. Home
  2. விபத்து

Tag: விபத்து

முதுகுளத்தூர் – சாயல்குடி இடையே சாலையோர பள்ளங்களால் விபத்து அபாயம்

முதுகுளத்தூர், : முதுகுளத்தூர் – சாயல்குடி இடையே சாலையோரங்களில் உள்ள மெகா பள்ளங்களால் விபத்து அபாயம் நிலவுகிறது. உடனடியாக இந்த பள்ளங்களை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முதுகுளத்தூர்- சாயல் குடி இடையே தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த வழித்தடத்தில் …

கமுதி-முதுகுளத்தூர் சாலையில் ஒடிந்து விழும் நிலையில் உள்ள மின் கம்பங்களால் விபத்து அபாயம்

கமுதி, :  கமுதி – முதுகுளத்தூர் சாலையில் கோட்டைமேடு பகுதியில் உள்ள மின்கம்பங்கள் சேதமடைந்து ஒடிந்து விழும் நிலையில் உள்ளன. இதனால் விபத்து அபாயம் உள்ளதால் உடனடியாக இந்த மின் கம்பங்களை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். கமுதி – முதுகுளத்தூர் சாலையில்…

மதுரை அருகே விபத்தில் முதுகுளத்தூர் கல்வி அதிகாரி சாவு

மதுரை அருகே புதன்கிழமை நிகழ்ந்த விபத்தில் முதுகுளத்தூர் பகுதி உதவிக் கல்வி அதிகாரி உயிரிழந்தார். ராமநாதபுரம் மாவட்டம் மேல்முதுகுளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சூசைதாஸ்(54). தொடக்கக் கல்வி உதவி அதிகாரி. இவரது மகன் அருண்ராகுல். ஜப்பானிய நிறுவனத்தில் பணிபுரிகிறார். ஊர் வந்திருந்த அருண்ராகுல் புதன்கிழமை மீண்டும் ஜப்பான் செல்ல மதுரை…

இருசக்கர வாகன விபத்து: இளைஞர் சாவு

முதுகுளத்தூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் நிலைதடுமாறி  விழுந்ததில் இளைஞர் இறந்தார், மற்றொருவர் படுகாயம் அடைந்தார். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா காக்கூர் காமராஜர்புரத்தைச் சேர்ந்தவர் காளிமுத்து. இவரது மகன் ராமதாஸ் (21). அதே ஊரைச்சேர்ந்த சங்கரன் மகன் கபிலன் (23). இவர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் முதுகுளத்தூரில்…

வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம்

கடலாடி: கடலாடி – முதுகுளத்தூர் ரோட்டில் போக்குவரத்துக்கு இடைறாக கம்பு, குதிரை வாலி உள்ளிட்ட சிறு தானிய பயிர்களை காயப்போடுவதால் வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. கடலாடி- முதுகுளத்தூர் பகுதியில் சிறு தானிய பயிர்களான கம்பு, குதிரைவாலி, சோளம் உள்ளிட்ட பயிர்கள் அறுவடையை எட்டியுள்ளது. இந்த தானிய…

கார் விபத்தில் அதிமுக பிரமுகர் படுகாயம்

முதுகுளத்தூரில் செவ்வாய்க்கிழமை கார் விபத்தில் அதிமுக கிளைச் செயலாளர் படுகாயம் அடைந்து ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள குமாரக்குறிச்சி காலனியைச் சேர்ந்த அதிமுக கிளைச் செயலாளர் சந்திரன் (55) காவல் நிலையம் அருகில் பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்தார். அப்போது…

குழாய் அமைக்கும் பணியால் நடுரோட்டில் மெகா பள்ளம் விபத்து அபாயம்

முதுகுளத்தூர் : முதுகுளத்தூர்- பரமக்குடி செல்லும் ரோட்டில், ரகுநாதகாவிரி ஆற்றுபாலத்தின் அருகே, குழாய் அமைக்கும் பணியால், நடுரோட்டில் “மெகா சைஸ்’ பள்ளம் உருவாகி, விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.   முதுகுளத்தூர் ரகுநாத காவிரி ஆறு பாலத்திற்கு முன், பயணியர் விடுதி, காந்திநகர் பகுதிகளுக்கு தண்ணீர் சப்ளை செய்ய அமைக்கபட்ட…

முதுகுளத்தூரில் மும்முனை சந்திப்பில் விபத்து அபாயம் சிக்னல் அமைக்க கோரிக்கை

முதுகுளத்தூர்:முதுகுளத்தூர் கடலாடி விலக்கு ரோடு மும்முனை சந்திப்பில், எச்சரிக்கை அறிவிப்பு போர்டு இல்லாததால், வாகனங்கள் விபத்துகளில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.முதுகுளத்தூரிலிருந்து கமுதி, கடலாடி, சாயல்குடி செல்லும், கடலாடி விலக்கு ரோடு, குறுகலாகவும், விபத்து களமாகவும் உருமாறி வருகிறது. எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல், இரண்டு, நான்கு சக்கர வாகன…

விபத்துகள் எனப்படும் படுகொலைகளும், தற்கொலைகளும்

புதுக்கோட்டை விபத்தில் இறந்த குழந்தைகள் அரசுப் பள்ளியில் படிப்பவர்கள். நடந்துபோகும் வழியில் வந்த பால் வண்டியில் ’லிப்ட்’ கேட்டு ஏறி, பேருந்துமோதி இறந்திருப்பதாகச் செய்திகள் சொல்கின்றன. இந்த நிலையில்…. விபத்தின் காரணமாய் அரசு வழக்கம்போல் விழித்துக்கொண்டு(!) இதைக் ‘கடுமையாகத்’தடுக்கும் வண்ணம், இப்படி வண்டிகளில் ஏற்றிச் செல்வது கடும் தண்டனைக்குரியது…

முதுகுளத்தூர் – அபிராமம் இடையே குறுகிய ரோடால் விபத்து அபாயம்

முதுகுளத்தூர்:முதுகுளத்தூர் – செல்வநாயகபுரம் வழியாக அபிராமத்திற்கு செல்லும் குறுகிய ரோடால், விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.முதுகுளத்தூரில் இருந்து செல்வநாயகபுரம், ஆணைசேரி, மணலூர் வழியாக அபிராமத்திற்கு இயக்கபட்ட அரசு பஸ் குறுகிய ரோடால், இரண்டு ஆண்டுகளுக்கு முன் ரத்து செய்யப்பட்டது. தற்போது மினி பஸ் மட்டுமே இயக்கப்படுகிறது. கனரக வாகனங்கள் எதிரேதிரே…