முதுகுளத்தூர் – சாயல்குடி இடையே சாலையோர பள்ளங்களால் விபத்து அபாயம்

Vinkmag ad

முதுகுளத்தூர், : முதுகுளத்தூர் – சாயல்குடி இடையே சாலையோரங்களில் உள்ள மெகா பள்ளங்களால் விபத்து அபாயம் நிலவுகிறது. உடனடியாக இந்த பள்ளங்களை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முதுகுளத்தூர்- சாயல் குடி இடையே தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த வழித்தடத்தில்  பல்வேறு கிராமங்கள் உள்ளன. முதுகுளத்தூரில் இருந்து ராமநாதபுரம், கடலாடி, சாயல் குடி, பரமக்குடி, அருப்புக்கோட்டை மதுரை, திருச்செந்தூர் உள்ளிட்ட நகரங்களுக்கு இந்த சாலை வழி யாக பஸ்கள், சரக்கு வாகனங்கள் அதிக எண்ணிக்கையில் செல்கின்றன.
வாகனப் போக்குவரத்து அதிகம் உள்ள இந்த சாலை சீரமைக்கப்பட்டு சில மாதங்களே ஆகின்றன. சாலையின் இருபுறமும் ஒரு மீட்டர் உயரத்திற்கு கிரா வல் மண் அடித்து, சாலை யை சீரமைத்திருக்க வேண் டும்.
அவ்வாறு செய்யாததால் ரோடு உயரமா கவும், சாலையோர பகுதி கள் தாழ்வாகவும் உள்ளன. மேலும் சாலையோர பகுதிகளில் உள்ள மண் அரிக்கப்பட்டு, பல இடங்களில் மெகா பள்ளங்கள் உருவாகியுள்ளன.

கடலாடி, ஆப்பனூர், புனவாசல், கீழச்சாக்குளம் உள்ளிட்ட பல பகுதிகளில் இந்த பள்ளங்களால் விபத்து அபாயம் நிலவுகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் டூவீலர்களில் வருபவர்கள் இந்த பள்ளங்களில் விழுந்து காயமடைந்து வருகின்றனர்.

உடனடியாக இந்த பள்ளங்களை சீரமைக்க நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண் டும் என இந்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

முதுகுளத்தூரை சேர்ந்த கருப்பையா கூறுகையில், “சாலையோர பகுதிகளில் உள்ள இந்த பள்ளங்களால் அடிக்கடி விபத்துகள் நடந்து வருகின்றன. பெரிய அளவிலான விபத்து நடைபெறும் முன்னர், நெடுஞ்சாலைத் துறையினர் இந்த பள்ளங்களை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்றார்.

News

Read Previous

இந்தியாவின் முக்கிய தினங்கள்

Read Next

திருச்சியில் வீடுகள் விற்பனைக்கு ……..

Leave a Reply

Your email address will not be published.