கார் விபத்தில் அதிமுக பிரமுகர் படுகாயம்

Vinkmag ad

முதுகுளத்தூரில் செவ்வாய்க்கிழமை கார் விபத்தில் அதிமுக கிளைச் செயலாளர் படுகாயம் அடைந்து ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள குமாரக்குறிச்சி காலனியைச் சேர்ந்த அதிமுக கிளைச் செயலாளர் சந்திரன் (55) காவல் நிலையம் அருகில் பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்தார். அப்போது பரமக்குடியில் இருந்து முதுகுளத்தூருக்கு வந்த ஆம்னி கார் நிலைதடுமாறி சந்திரன் மீது மோதியது. இதில் சந்திரனுக்கு தலை, கை, கால் ஆகிய இடங்களில் காயம் ஏற்பட்டது. இதனால் மயக்கம் அடைந்த நிலையில் முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று,

ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து குறித்து சந்திரன் மகள் லதா கொடுத்த புகாரின் பேரில், ஆம்னி கார் உரிமையாளர் குருவிக்காத்தியைச் சேர்ந்த சிவராமு மீது, முதுகுளத்தூர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திலகவதி வழக்குபதிவு செய்து சிவராமுவை கைது செய்து விசாரித்து வருகிறார்.

News

Read Previous

நோய் வந்தால் “நொந்து’ போக வேண்டும்: ரோடு இல்லாத பொந்தம்புளியில் அவஸ்தை

Read Next

அடிப்படை வசதியில்லாத இளஞ்செம்பூர் ஆரம்ப சுகாதார நிலையம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *