அடிப்படை வசதியில்லாத இளஞ்செம்பூர் ஆரம்ப சுகாதார நிலையம்

Vinkmag ad

முதுகுளத்தூர் அருகே இளஞ்செம்பூரில் ஓட்டு வீட்டில் அடிப்படை வசதியில்லாமல் ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே இளஞ்செம்பூரில் துணை ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இதில் இளஞ்செம்பூர், பூக்குளம், வீரம்பல், எம்.சாலை உள்ளிட்ட கிராமங்களில் வசிக்கும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

ஆனால் எந்த வித அடிப்படை வசதியும் இல்லாக ஓட்டு வீட்டில் இம்மையம் இயங்கிவருகிறது. இந்த சுகாதார நிலையத்திற்கென செவிலியர்கள் கிடையாது. காய்ச்சல், தலைவலி, விஷக்கடி போன்றவைகளுக்கு 10 கி.மீ உள்ள முதுகுளத்தூர் மருத்துவமனைக்கு செல்ல வேண்டியுள்ளது.

 

அனைத்து கிராங்களிலும் மர்மக் காய்ச்சல் பரவி வருவதால் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நிரந்தரமாக செவிலியர்களை பணி நியமனம் செய்தும், துணை சுகாதார நிலையத்தை அரசு கட்டடத்திற்கு மாற்றவும் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இளஞ்செம்பூர் கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News

Read Previous

கார் விபத்தில் அதிமுக பிரமுகர் படுகாயம்

Read Next

தில்லியில் இம்மாதம் 30ம் தேதி எழுத்தாளர்கள் மாநாடு

Leave a Reply

Your email address will not be published.